(கவிஞர் மு.பாவாணன் என்பது என் தந்தையின் புனைப்பெயர். இந்த வலைப்பூவின் முதல் பதிப்பாக அவர் எழுதிய கவிதையை பதித்து, அவரின் பாதங்களைப் பணிந்து தொடங்குகிறேன்).
Sunday, June 28, 2015
கயிலை மலை வாழும் காருண்யனே
கயிலை மலை வாழும் காருண்யனே - யாவும்
கடந்ததொரு நிலையில் இருப்பவனே - ஈசா (கயிலை)
பயிலும் ஊழித் தாண்டவம் ஆடும் உன்
பாதங்களில் வீழ்ந்து பணிந்திட அருள்வாய் (கயிலை)
ஐம்புலன்கள் என்னும் யானைகள் அடங்க
அலைகின்ற உள்ளம் ஒர்வழி நிலைக்க
மெய்வடி வானஉன் பெயர்சொல்லித் துதிக்க
மேலான பேரின்பம் நான்காண அருள்வாய் (கயிலை)
****************************
கடந்ததொரு நிலையில் இருப்பவனே - ஈசா (கயிலை)
பயிலும் ஊழித் தாண்டவம் ஆடும் உன்
பாதங்களில் வீழ்ந்து பணிந்திட அருள்வாய் (கயிலை)
ஐம்புலன்கள் என்னும் யானைகள் அடங்க
அலைகின்ற உள்ளம் ஒர்வழி நிலைக்க
மெய்வடி வானஉன் பெயர்சொல்லித் துதிக்க
மேலான பேரின்பம் நான்காண அருள்வாய் (கயிலை)
****************************
கவிஞர். மு. பாவாணன்.
No comments:
Post a Comment